எம்மைப்பற்றி

Associated Motor Finance Company PLC. is a government recognized Financial Institution registered with the Monetary Board of Central Bank of Sri Lanka under the Finance Companies Act, No.78 of 1988.
https://www.amf.lk/wp-content/uploads/2015/07/1.jpg

தொலைநோக்கு


ஆர்வமுள்ளோருக்கு மிகச்சிறந்த நிதி நிறுவனமாகச் செயற்படும் அதேவேளை அவர்களின் முதலீட்டுக்கு இத்துறையில் சராசரியை விட அதிகமாகப் பெற்றுக்கொடுத்து திருப்தியடையச் செய்வதாகும்.

இலக்கு


எமது வாடிக்கையாளர்களுக்கு குத்;தகைத் தீர்வுகளில் உயர்தர சேவைகளையும் வசதிகளையும் பெற்றுக்கொடுத்து அவர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அதி உன்னத நிறுவனமாக திகழ்வதாகும்.
https://www.amf.lk/wp-content/uploads/2015/07/2.jpg

வரலாறு


https://www.amf.lk/wp-content/uploads/2015/07/history_associated_motor_finance-320x205.jpg
jjjjj

காலஞ்சென்ற திரு. ஜே.பி.ஐ.பியதாசவின் 1938 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க கம்பனிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் 1962 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்;டத்தின் கீழ் மீள் பதிவு செய்யப்பட்;டது. 1960 முதல் 1980 வரையான காலப்பகுதியில் தொலைநோக்குடன் கூடிய ஒரு முன்னணி வர்த்தகரான இவர் இலங்கையில் முழுமையாக மூடிய பொருளாதாரம் செயற்படும் காலத்தில் இந்த நிறுவனத்தை ஆரம்பித்து வைத்தார். வர்த்தகத் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தி சிறந்த பெறுபேறுகளை உருவாக்கிய ஒரு முக்கிய நடவடிக்கையாளரான இவர் உள்நாட்டு மூலப்பொருட்கள் மூலம் உற்பத்திகளை மேற்கொண்டு அவற்றின் மூலம் வர்த்தக வாய்ப்புக்களை உருவாக்கவும் நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். அவரின் மறைவுக்குப் பின் 1995 ஆம் ஆண்டில் திரு. ஜே.பி.ஐ.நாலத தயாவன்ச நிறுவனத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளராக பதவியேற்றார். மாபெரும் நிதித்துறை அனுபவம் அவருக்கு பெரும் துணையாக அமைந்தது. கடந்த 10 வருட காலமாக பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்து பல்வேறு பொருளாதார நிலைகளிலும் யுத்த காலப்பகுதியிலும் முக்கிய மைல்கற்களை அடைந்துகொள்ள நிறுவனத்தினால் முடிந்துள்ளது. முக்கியமாக பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் என்பனவற்றுக்கு குத்தகை மற்றும் வாடகைக் கொள்வனவு வசதிகளைப் பெற்றுக்கொடுப்பது இதன் பிரதான நோக்கமாகும். இத்துறை பெரும் இடர் நிறைந்த ஒரு பிரிவாக நிதி நிறுவனங்களினால் கருதப்பட்டாலும்கூட மிகவும் கவனமாகவும் செயற்திறனுடனும் செயலாற்றி வரும் amf நிதி நிறுவனங்களுக்கு ஒரு முன்னுதாரணமாகச் செயற்பட்டு வருகிறது. 1988 ஆம் ஆண்டின் 78 ஆம் இலக்க நிதி நிறுவனங்கள் சட்டதின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனமாகும். AMFஇன் வர்த்தகச் செயற்பாடுகளுக்கு கிளைகள் இல்லாமை ஒரு தடையாக அமையவில்லை. தம்மிடமுள்ள உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்குநர்கள் மற்றும் வங்கிகளின் உதவியுடனுடம் நாடு தழுவிய ரீதியிலான விநியோகத்தர்களின் வலையமைப்பின் மூலமும் வாடிக்கையாளர்களுக்கு புதிய குத்தகை வசதிகளை AMF பெற்றுக்கொடுத்து மாதாந்த அடிப்படையில் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் வசதியை வாடிக்கையாளர்கள் அடைந்து கொள்கிறார்கள். கொடுப்பனவுகளை நாட்டின் எந்தவொரு பாகத்திலும் உள்ள கொமர்ஷல் வங்கியில் மேற்கொள்ள முடியும். இதன் மூலம் தமது குத்தகைக் கடன் வசதிகள் சகல பகுதிகளுக்கும் சென்றடையவும் மீள் அறவீடுகளை இலகுவாக முன்னெடுக்கவும் யுஆகு இனால் முடிந்துள்ளது.

எமது பெறுமானங்கள்


வாடிக்கையாளர்கள்

எமது வாடிக்கையாளர்கள் ஒரு தனித்துவமான பிரிவினராக இருந்தாலும் அவர்களுக்கு நம்பிக்கையுடன் நேர்த்தியான நிதிச் சேவைகளைப் பெற்றுக்கொடுத்து அவர்கள் தங்களது இலக்குகளை அடைந்துகொள்ள உதவுவது எமது ஒரேயொரு நோக்கமாகும்.

வைப்பு உரிமையாளர்கள்

எமது முதலீட்டாளர்களுக்கு அரச கட்டுப்பாடுகளுக்கு அமைய சிறந்த பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேவேளை அதிகூடிய அனுகூலங்களைப் பெற்றுக்கொடுப்பது எமது ஒரே நோக்கமாகும்

பங்குதாரர்கள்

எமது சகல வர்த்தகப் பிரிவுகளையும் சிறப்பாக முகாமைப்படுத்தி நிலையான பெறுபேறுகளை அடைந்து கொள்வதுடன் இத்துறையில் முதலீடுட்;டாளர்களின் பெறுமதியை தொடர்ச்சியாக ஏனைய சராசரிக்கும் அதிகமாகப் பெற்றுக்கொடுப்பதன் மூலமாக அவர்களது நம்பிக்கையை வென்று செயற்படுவது எமது ஒரே நோக்கமாகும்.

ஊழியர்கள்

குழு எண்ணக்கருவை எமது ஊழியர்களிடையே ஸ்தாபித்து சகல பிரிவினருக்கும் சாதகமான எதிர்காலத்தைப் பெற்றுக்கொடுப்பதும் அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் எமது வர்த்தக நடவடிக்கைகளை உயர்வடையச் செய்வதும் எமது ஒரே நோக்கமாகும்.


எங்களை பற்றி

logo-footer-amf

அசோஸியேட் மோட்டோர் பினான்ஸ் கம்பனி பிஎல்சி நிறுவனமானதுää 1988 ஆம் ஆண்டின் 78 ஆம் இலக்க நிதி நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையில் பதிவு செய்யப்பட்ட அரச அங்கீகாரம் பெற்ற ஒரு நிறுவனமாகும்.