முகாமைத்துவக் குழு

The driving force behind our abiding corporate legacy

எமது குழும வெற்றிக்குப் பின்னணியில் மாபெரும் அணியொன்று உள்ளது. எமது சிறந்த குழுமச் செயற்பாடுகளுக்கு ஒரு முக்கிய காரணியாக அனுபவம் வாய்ந்த சிறந்த சிரேஷ்ட முகாமைத்துவக்குழு செயற்பட்டு வருகிறது. அவர்கள் வாகனம் தொடர்பான நிதித் தீர்வுகளை வழமையான எல்லைகளையும் தாண்டிச் செயற்பட்டு வருகிறார்கள். இதனால் எமது சேவைகள் உங்களுக்கு ஃ உங்கள் நிறுவனத்திற்கென்றே தனிப்பட்ட ரீதியில் உருவாக்கப்பட்ட தெளிவான சேவைகளாக அமைந்துள்ளன. இதற்கென எமக்கு வழிகாட்டியமைக்காகäமுகாமைத்துவக் குழுவுக்கு நாம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பணிப்பாளர் சபை


டொக்டர் ரொஹான் கருணாரத்ன (தலைவர் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்) Ph.D (USA.) Ph.D (சசெக்ஸ்), MBA. (லண்டன்), B.ENG. (இந்தியா)

(தலைவர் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்) Ph.D (USA.) Ph.D (சசெக்ஸ்), MBA. (லண்டன்), B.ENG. (இந்தியா)

டொக்டர் ரொஹான் கருணாரத்ன அவர்கள் திறமைமிகு சிவில் பொறியியலாளர் ஒருவராவார். இவர் கட்டட நிர்மாணத்துறை முகாமைத்துவம் மற்றும் வர்த்தக முகாமைத்துவம் ஆகிய துறைகளில் கலாநிதிப் பட்;டம் பெற்றவராவார். மேலும் வர்த்தக முகாமைத்துவத்தில் ஆடீயு பட்டத்தையும் பொறியியல் இளமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். மேலே கூறப்பட்ட கல்வித் தகைமைகளுக்கு மேலதிகமாகää சிவில் பொறியியல் துறையில் பல்வேறு தொழில் நிபுணத்துவத் தகுதிகளையும் அவர் கொண்டுள்ளார். சிவில் பொறியியல் துறையில் டிப்ளோமா (இந்தியா) T.ENG.(CEI) MSE. (லண்டன்) என்பன அவரது மேலதிகத் தகைமைகளாகும். சிவில் பொறியியல் துறையில் டிப்ளோமா (இந்தியா) T.ENG.(CEI) MSE. பொறியியலாளர்கள் சங்கத்தின் பட்டம் பெற்றவர். (லண்டன்). பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் கல்லூரியின் அங்கத்தவர் (லண்டன்) பொறியியல் பதிவு சபையின் அங்கத்தவர் (லண்டன்) சர்வதேச முகாமைத்துவக் இலங்கை கட்டட அமைப்பாளர் கல்லூரியின் தோழமை உறுப்பினர் இலங்கை கட்டட அமைப்பாளர் கல்லூரியின் தோழமை உறுப்பினர் சிவில் பொறியியல் கட்டட நிர்மாணம் பொறியியல் ஆலோசனை கட்டட நிர்மாணப் பயிற்சி சிவில் கட்டட நிர்மாணத்துறையில் விரிவுரையாளர் வடிவமைப்பு மற்றும் திட்டமிடல் ஆகிய துறைகளில் 27 வருடங்களுக்கும் அதிகமான பட்டப் பின் அனுபவம் பெற்றவர். தற்போது இவர் பல்வேறு நிறுவனங்களிலும் தொழிற்துறை அமைப்புக்களிலும் பல முக்கிய பதவிகளை வகித்து வருகிறார்.   தலைவர் : இலங்கை கட்டட நிர்மாணத்துறைக் கல்லூரி தலைவர் : மனிதவள அபிவிருத்தி தனியார் நிறுவனம் தலைவர் A.K.K இஞ்ஜினியர் பிரைவட் லிமிட்டெட் பிரதித் தலைவர் : சர்வதேச முகாமைத்துவ நிறுவனம் இறுதியாக இருந்த தலைவர் : இலங்கை தேசிய கட்டட நிர்மாண சங்கம இறுதியாக இருந்த தலைவர் : உயர்மட்ட கட்டட நிர்மாண பயிற்சிக் கல்லூரி இறுதியாக இருந்த தலைவர் : NCASL கென்ஸ்ரக்டர்ஸ் (பிரைவெட்) லிமிட்டெட்

திரு. ஜே.பி.ஐ.நாளத தயாவன்ச (முகாமைத்துவப் பணிப்பாளர்)

திரு. ஜே.பி.ஐ.நாளத தயாவன்ச அவர்கள்ä ஜேர்மனின் ஸ்ரட்கார்ட் நிறுவனத்தில் தானியங்கி பொறியியல் துறையில் டிப்ளோமா பெற்றவர். அவர் டிமோ மேர்ஸிடிஸ் பென்ஸ் AG மற்றும் BOSCH GMBH ஆகிய நிறுவனங்களில் பயிலுநராகப் பணியாற்றியவர். தானியங்கி பொறியியல் துறையில் கடுமையான பயிற்சியை உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் இவர் பெற்றுள்ளார். இத்துறையில் கூடுதல் அனுபவம் மிக்கவரான இவர் இலங்கையில் தனது சொந்த வர்த்தகமான இம்பீரியல் இன்போட் அன்ட் எக்ஸ்போட் கம்பனி (பிரைவெட்) லிமிட்டெட் நிறுவனத்தை 1983 இல் ஆரம்பித்தார். இவர் பாவிக்கப்பட்ட உயர்தர மோட்டார் வாகனங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்து வருகிறார். மேலும் இந்நிறுவனம் விவசாய மற்றும் கனரக இயந்திரகளையும் பிரைம் மூவர்களையும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து இறக்குமதி செய்கிறது. ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதார மற்றும் முகாமைத்துத்திற்கான லண்டன் கல்லூரியில் பொருளாதார மற்றும் முகாமைத்துவத்திற்கான டிப்ளோமா பெற்றவராவார். அவரது தந்தையாரான காலஞ்சென்ற திரு.ஜே.பி.ஐ.பியதாச அவர்களின் இழப்பை அடுத்து 1982 ஆம் ஆண்டில் அசோஸியேட்டட் மோட்டோர் பினாஸ் கம்பனி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக பணிப்பாளர் சபையில் 1982 ஆம் ஆண்டில் அவர் இணைந்து கொண்டார். 1995 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் தலைவராகவும் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் அவர் பதவியேற்றார். சுமார் 30 வருடங்களுக்கும் அதிக காலம் நிதி ஹோட்டல் மற்றும் களியாட்டத்துறை ஆடைக் கைத்தொழில் ஏற்றுமதி இறக்குமதி ஆகிய துறைகளில் இவர் சிறந்த அனுபவம் கொண்டுள்ளார். மேலும் இவர் பொல்டெக் சிலோன் லிமிட்டெ; நிறுவனத்தின் தற்போதைய தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளரும் ஆவார். இது ஆடை உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் ஒரு நிறுவனமாகும். இம்பீரியல் இன்போர்ட் அன்ட் எக்ஸ்போர்ட் கம்பனி (பிரைவெட்) லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான இவர் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பாவிக்கப்பட்;ட மோட்;டார் வாகனங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்து விற்பனை செய்யும் இந்நிறுவனத்தை சிறப்பாக முன்னெடுத்து வருகிறார்.

திருமதி டப்ளியூ.ஏ.எஸ்.தயாவன்ஸ (பணிப்பாளர்)

திருமதி டப்ளியஏ.எஸ்.தயாவன்ச அவர்கள் 1995 ஆம் ஆண்டில் அசோஸியேட் மோட்டோர் பினான்ஸ் கம்பனி லிமிட்டெட் நிறுவனத்தில் நிறைவேற்றுப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இதற்கு மேலதிகமாக ஆடை ஏற்றுமதித்துறையில் ஈடுபட்டுள்ள பொல்டெக் சிலோன் லிமிட்டெட் நிறுவனத்தின் பணிப்பாளராகவும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து பாவிக்கப்பட்ட வாகனங்களைத் தருவித்து விநியோகம் செய்யும் இம்பீரியல் இன்போர்ட் அன்ட் எக்ஸ்போர்ட் கம்பனி (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் பணிப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார். முன்னணி ஆடை விற்பனை நிலையமான அயந்தி நிறுவனத்தின் முகாமைத்துவப் பங்காளியான இவர் நிதி ஆடைத் தயாரிப்பு இறக்குமதி – எற்றுமதி போன்ற துறைகளில் 15 வருடங்களுக்கும் மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

திரு. சனில் தயாவன்ச (BA) Acct & Mgt (லண்டன்) – நிறைவேற்றுப் பணிப்பாளர்

திரு. ஜே.பி.ஐ.சனில் தயாவன்ச அவர்கள் கணக்கியல் மற்றும் முகாமைத்துவத்தில் ஐக்கிய இராச்சியத்தின் எஸெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கலை இளமாணிப் பட்;டம் பெற்றவர். அவுஸ்திரேலியாவின் மெல்பர்னிலுள்ள மொனாஷ் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வர்த்தகப் பிரிவில் முதுமாணிப் பட்டத்திற்கான கற்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். அசோஸியேட் மோட்டோர் பினாஸ் கம்பனி லிமிட்டெட் நிறுவத்னதின் பணிப்பாளர் சபையில் 2009 ஆம் ஆண்டு நிறைவேற்றுப் பணிப்பாளராக இவர் இணைந்து கொண்டார். பணிப்பாளர் சபைக்கு இளம் சிந்தனை எண்ணங்களை;ப பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இவரது இணைப்பு அமைந்திருந்தது. இவரது கணக்கியல் மற்றும் நிதிசார் கல்வி நடவடிக்கைகளின் பலனாக எதிர்காலத்தில் நிறுவனத்தின் ஆளுமை மற்றும் ஏனைய குழும நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

திரு. கே.டி.ய.எஸ்.நாணயக்கார (நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீன பணிப்பாளர்)

திரு. நாணயக்கார அவர்கள் தூய கணித்ததிலும் பௌதீகவியல் கல்வியிலும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான இளமாணி பட்டம் பெற்றவர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டப் பின்படிப்புக்கான முகாமைத்துவ நிறுவனத்தில் (PIM) MBA பட்டம் பெற்றவராவார். இவர் ஐக்கிய இராச்சியத்தின் முகாமைத்துவக் கணக்காளர்கள் நிறுவனத்தின் தோழமை அங்கத்தவராவார். திரு. நாணயக்கார தனது தொழிற்துறையை MAS ஹோல்டின்ஸ் நிறுவனத்தின் முழுமையான இணை நிறுவனமான லீனியா இன்டிமோ நிறுவனத்தில் 1999 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார். தற்போது MAS ஹோல்டின்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது மிகப்பெரிய பிரிவான MAS அக்டிவ் பிரிவின் நிதி மற்றும் திட்டமிடல் பணிப்பாளராகச் செயலாற்றி வருகின்றார். மேலும் சீனா இந்தியா மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளின் உற்பத்திப் பங்காளி நிறுவனங்களை ஆரம்பிப்பதில் முக்கிய நடவடிக்கையாளராக இவர் பணியாற்றியுள்ளார். இவரது தலைமையில் முன்னெடுக்கப்பட்ட வட மாகாணத்தில் அமைக்கப்படவிருந்த உற்பத்தி நிலையத்தின் ஆரம்பக்கட்ட ஆய்வுகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு தற்போது நடைமுறையிலுள்ளது. மேலும் அவரது தலைமையின் கீழ் 2012 ஆம் ஆண்டில் ஊஐஆயு கேஸ் ஸ்ரடி எவயார் விருதை MAS அக்டிவ் நிதிப் பிரிவு வென்றெடுத்தது. சேவைத்துறை ஒன்றில் லீன் என்டர்பிரைஸ் என்ற ‘தேற்றத்தை” செயற்படுத்துவதில் வெற்றியடைந்தமையை முன்னிட்டு இந்த விருது வழங்கப்பட்டது.

திரு. எல்.சி.டப்ளிய எதிரிசூரிய B.COM, ACA, FCMA- நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீன பணிப்பாளர்

திரு.எல்.சி.டப்ளிய10.எதிரிசூரிய அவர்கள் ஒரு பட்டயக் கணக்காளராவார். இவர் எதிரிசூரிய அன்ட் கம்பனி என்ற நிறுவனத்தை முன்னெடுத்து வருகின்றார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வர்த்தக இளமாணி விசேட பட்டம் பெற்றவரான இவர் இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் இணை அங்கத்தவராவார். இலங்கை சான்றிதழ் பெற்ற முகாமைத்துவக் கணக்காளர்கள் நிறுவனத்தின் தோழமை உறுப்பினருமாவார். கணக்காய்வு நிதி முகாமைத்துவம் நிதியங்கள் முகாமைத்துவம் ஆலோசனை அலுவல்கள் நிறுவனங்களின் செயலாளர் சேவை விசேடமாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் கூட்டுத்தாபனங்கள் வங்கிகள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் 25 வருடங்களுக்கும் மேல் அனுபவம் பெற்றவர். நெல் சந்தைப்படுத்தல் சபை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபை ஆகியவற்றில் சிரேஷ்ட நிறைவேற்றுப் பதவிகளையும் வகித்துள்ள இவர் கணக்காய்வு மேற்பார்வை கணக்கியல் முகாமைத்துவம் ஆகிய பிரிவுகளுக்குத் தலைமை தாங்கியுள்ளார். ICASL உட்பட பல்வேறு கணக்கியல் நிறுவனங்கில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றும் இவர் நிறுவனங்களின் செயலாளர் பணிகள் மற்றும் முகாமைத்துவ ஆலோசனைச் சேவைகளை முன்னெடுத்து வரும் நிறுவனமான அக்ஸஸ் கம்பனி (பிரைவேட்) நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருமாவார்

தலைமைத்துவமும் குழு


https://www.amf.lk/wp-content/uploads/2015/11/Sallay-320x214.jpg
jjjjj

ரி.எம்.ஏ.சாலி (பிரதம நிறைவேற்று அதிகாரி)

அவுஸ்திரேலியாவின் சான்றிதழ் பெற்ற முகாமைத்துவக் கணக்காளர்கள் நிறுவனத்தின் முழுமையான அங்கத்தவரான இவர் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய முகாமைத்துவக் கணக்காளர்கள் நிறுவனத்தில் பகுதியளவில் தகைமை பெற்றவராவர். தற்போது மலேசியாவின் ஏஷியா ஈ பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாகம் தொடர்பான முதுமாணிப் பட்டத்திற்கான கற்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். நிதித்துறையில் 30 வருடங்களுக்கும் மேற்பட்;ட அனுபவம் வாய்ந்தவரான இவர் கணக்காய்வு சந்தைப்படுத்தல் கடன் மற்றும் மீள் அறவீடு திட்ட முகாமைத்துவம் மற்றும் நிகழ்வுகள் முகாமைத்துவம் ஆகிய துறைகளில் அனுபவம் பெற்றுள்ளார். பல்வேறு நிறுவனங்களில் செயற்பாட்டு மட்டத்திலும் உபாய மட்டத்திலும் அனுவம் பெற்றுள்ள இவர் நிதி மருத்துவம் ஹோட்டல் துறை சர்வதேச நிகழ்வுகளின் ஏற்பாடுகள்äதொலைத்தொடர்பு வர்த்தக மற்றும் உற்பத்தி ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவராவார். 1997 ஆம் ஆண்டில் அசோஸியேட்டட் மோட்டோர் பினாஸ் கம்பனி லிமிட்டட் நிறுவனத்தின் குழுமக் கணக்காளராக இணைந்து கொண்ட இவர் அதன் பின்னர் பிரதம நிறைவேற்று அதிகாரி ஃ பொது முகாமையாளராக பதவி உயர்வு பெற்றார். இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குபடுத்தப்படும் பல்வேறு நிதி நிறுவனங்களில் சுமார் 20 வருட அனுபவத்தைக் கொண்டுள்ள இவர் பிரதம நிறைவேற்று அதிகாரி ஃ பொது முகாமையாளராகப் பதவியேற்ற நாள் முதல் முழு நிறுவனத்தினதும் மொத்;த முகாமைத்துவத்தை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றார். நிதித்துறையில் தனது அனுபவத்தை நன்கு வெளிப்படுத்திய இவர் மத்திய வங்கியினால் ஏற்படுத்தப்பட்டுள்ள தீவிரமான நிதித் தேவைப்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு அமைய நிறுவனத்தின் நிதிப் பிரிவை தரமான முறையில் முன்னெடுத்து வருவதில் சிறந்து விளங்கியுள்ளார்.
https://www.amf.lk/wp-content/uploads/2015/11/prof-pic-dummy-320x214.jpg
jjjjj

திரு. கே.ஐ.எஸ்.கிரேரோ – முகாமையாளர் – சந்தைப்படுத்தல் (வாகனங்கள்)

திரு. கிரேரோ போக்குவரத்து சுற்றுலாத்துறை மற்றும் நிதித்துறை ஆகிய பிரிவுகளில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறையில் 19 வருடங்களுக்கும் மேற்பட்ட அனுபவத்தைப் பெற்றுள்ளார். இதில் 11 வருடங்கள் முகாமைத்துவப் பதவிகளை வகித்துள்ளார்.
https://www.amf.lk/wp-content/uploads/2015/11/Shantha-320x214.jpg
jjjjj

திரு.ஜி.எஸ்.எஸ்.குணசேகர – சிரேஷ்ட முகாமையாளர் – சந்தைப்படுத்தல் (குத்;தகை மற்றும் வாடகைக் கொள்வனவு

ஏஷியா லங்கா வொகேஷனல் எடியுகேஷன் நிறுவனத்தில் சந்தைப்படுத்தல் டிப்ளோமாவை பெற்றுள்ள திரு. குணசேகர கணக்கியல் நிபுணத்துவப் பயிற்சி நிறுவனத்தில் பயன்பாட்டுக் கணக்கியல் உயர் டிப்ளோமாவையும் பெற்றுள்ளார். இலங்கை கணக்கியல் தொழில்நுட்பவியலாளர்கள் நிறுவனத்தில் பகுதி தகைமை கொண்டவரான இவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது முகாமைத்துவம் தொடர்பான டிப்ளோமா பெற்றுள்ளார். நிதித்துறையில் சுமார் 23 வருடங்கள் சேவையாற்றியுள்ள இவர் 12 வருடங்கள் முகாமைத்துவப் பதவிகளை வகித்துள்ளார்.
https://www.amf.lk/wp-content/uploads/2015/11/Nilan-320x214.jpg
jjjjj

திரு. பி.ஏ.நளின் பெரேரா – சிரேஷ்ட முகாமையாளர் – நிதி மற்றும் தகவல் தொழில்நுட்பம

திரு. பெரேரா இலங்கை கணக்கியல் தொழில்நுட்பவியலாளர் நிறுவனத்தில் பகுதி தகைமை பெற்றவர். இலங்கை சான்றிதழ் பெற்ற முகாமைத்துவக் கணக்காய்வாளர் நிறுவனத்தல் பதிவு பெற்ற மாணவராவார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் வெளிக்களப் பட்டப் படிப்பினை தகவல் தொழில்நுட்ப இளமாணி பிரிவில் மேற்கொண்டு வருகின்றார். கணக்கியல் துறையில் 22 வருட கால அனுபம் பெற்றுள்ள இவர் 8 வருடங்கள் முகாமைத்துவப் பதவிகளை வகித்துள்ளார்.
https://www.amf.lk/wp-content/uploads/2015/11/prof-pic-dummy-320x214.jpg
jjjjj

திரு. வஜிர பண்டிதரத்ன – சிரேஷ்ட முகாமையாளர் – கடன் அறவீடுகள

திரு. பண்டிதரத்ன ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் எழுத்து மற்றும் தொலைத்தொடர்பு டிப்ளோமாவை முடித்துள்ளார். இவர் உளவியல் மற்றும் ஆலோசனை டிப்ளோமாவையும் பெற்றவராவார். ளுடுஐஆ நிறுவனத்தில் சான்றிதழ் படிப்பினைப் ப10ர்த்தி செய்துள்ள இவர் 12 வருட காலம் அனுபவம் பெற்றவராவார். இதில் 8 வருடங்கள் ஊடக தொலைத்தொடர்பு பிரிவில் கடமையாற்றியுள்ளார். 05 வருட காலம் முகாமைத்துவப் பதவிகளையும் இவர் வகித்துள்ளார்.

எங்களை பற்றி

logo-footer-amf

அசோஸியேட் மோட்டோர் பினான்ஸ் கம்பனி பிஎல்சி நிறுவனமானதுää 1988 ஆம் ஆண்டின் 78 ஆம் இலக்க நிதி நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையில் பதிவு செய்யப்பட்ட அரச அங்கீகாரம் பெற்ற ஒரு நிறுவனமாகும்.